மீண்டும் தேடிப்போய் 'மாட்டிய' விக்ரம்!

அந்நியன் படத்துக்குப் பிறகு சொல்லிக் கொள்கிற மாதிரி படங்கள் எதையும் விக்ரம் தரவில்லை. எந்தப் படமும் அத்தனை சீக்கிரம் வெளியாகவுமில்லை.


அந்நியன் படம் துவங்கி வெளியாக கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் பிடித்தது. வேறு படங்கள் எதிலும் அவர் கமிட் ஆகவுமில்லை. தமிழில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடியது அந்தப் படம். ஆனால் அதன் தெலுங்குப் பதிப்புதான் ஓரளவு கைகொடுத்தது.


அதன் பிறகு விக்ரம் நடித்த மஜா, சீக்கிரம் வெளியானாலும் வெற்றி பெறவில்லை.



பீமா என்ற படத்தில் நடிப்பதற்காக கிட்டத்தட்ட 3 ஆண்டுகளைச் செலவிட்டார் விக்ரம். அதுவும் தோல்விப் படம்தான். அதன் பிறகு கந்தசாமி. சிலர் பரவாயில்லை என்றும், பலர் கந்தல்சாமி என்றும் இன்னும் கிண்டலடித்து வரும் இந்தப் படத்துக்காக 2 ஆண்டுகளுக்குமேல் செலவழித்தார் விக்ரம்.



ஆனால் இப்படியெல்லாம் பில்டப் கொடுக்காமல், கால விரயம் செய்யாமல் அவர் நடித்த சாமி, காசி போன்ற படங்களே அவருக்கு நல்ல பெயரைக் கொடுத்துள்ளன.



இப்போது மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் விக்ரம். இந்தப் படமும் இரண்டாண்டுகளாக படப்பிடிப்பில் இருந்து வருகிறது. சரியான திட்டமிடல் இல்லாமை மற்றும் தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதால் இன்னும் படப்பிடிப்பு முடிந்தபாடில்லை. எப்போது வரும் என்பதும் யாருக்கும் தெரியவில்லை.



இருந்தாலும் விக்ரம் திருந்துவதாக இல்லை... மீண்டும் ஒரு மெகா லேட் புகழ் இயக்குநரிடம் சிக்கியிருக்கிறார். அவர் செல்வராகவன். இவர் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படம் இன்னும் வெளிவரவில்லை. அப்படியே வெளிவந்தாலும், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தப்பிக்க முடியாத அளவுக்கு தாறுமாறான பட்ஜெட்டில் படம் எடுத்து வைத்துள்ளார். இந் நிலையில் அந்தப் படத்தை அப்படியே விட்டுவிட்டு, விக்ரமை வைத்து லடாக்கில் அடுத்த படத்துக்கான படப்பிடிப்பு துவங்கிவிட்டதாகக் கூறி வருகிறார் செல்வராகவன்.



படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை செல்வராகவன். கேட்டால், 'இப்போது ஒன்றும் அவசரமில்லை... இரண்டு மூன்று மாதங்கள் போகட்டும் பார்க்கலாம்' என்று சொல்லிவிட்டாராம்.



நல்ல அறிகுறி!.

சின்னத்திரைக்கு வந்த பெரிய மனசு நடிகைகள்!

சினிமாவில் பிசியாக இருந்தாலும், சின்னத்திரையிலும் நடித்து அதிர்ச்சியை கொடுப்பார் பிரகாஷ்ராஜ். நடிப்புன்னா எல்லாம் ஒண்ணுதான்.


இதிலே நாடகம் என்ன? சின்னத்திரை என்ன? வில்லன் என்ன? ஹீரோ என்ன? என்பார் திறந்த மனசுடன். இதே ஸ்டைலை இப்போது ஒரு சில நடிகைகளும் பின்பற்ற ஆரம்பித்திருப்பதால், சின்னத்திரை ஏரியாவில் ஒரே கொண்டாட்டம்!.

பிரபல சேனல் ஒன்றில் இடம் பெறும் முக்கிய நிகழ்ச்சியான சாகச நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் லட்சுமிராய். இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக போகாவிட்டாலும், இப்போதும் மார்க்கெட்டில் டிமாண்ட் இருக்கதான் செய்கிறது இவருக்கு. தமிழை விட மலையாளத்தில் இன்னும் கொஞ்சம் கிரேஸ். அப்படியிருக்கு ஏனுங்க சின்னத்திரை விசிட்? கேட்டால், படபடவென்று பொறிந்து தள்ளுகிறது பொண்ணு.



தாம் தூம் படத்தில் பெரிய ஹீரோவுடன் நடிச்சிட்டு இருக்கும் போது கூட சின்னத்திரை ஷோவில் கலந்து கொண்டவதான் நான். எனக்கு எந்த பாகுபாடும் இல்லை. அதே மாதிரிதான் இப்போ இந்த நிகழ்ச்சியிலேயும் கலந்துக்கிறேன். சினிமாவை விட மக்களிடம் இன்னும் எளிதாக போய் சேருகிற ஃபீல்டு சின்னத்திரைதான். இன்னும் பெரிய இடத்திற்கு போனாலும், நேரம் இருந்தா சின்னத்திரையில் என் பங்களிப்பு தொடரும் என்கிறார்.


இவராவது டம்பி பீஸ். எக்கச்சக்க சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் ஜெனிலியாவே சின்னத்திரையில் ஒரு ஷோவை தொகுத்து வழங்குகிறார். ஆனால் தமிழ் சேனல்களில் அல்ல, இந்தியில்! எப்பூடீய்ய்ய்ய்...

விவேக்குக்கு சப்போர்ட்? வேண்டுகோள் வைக்கும் கவிஞர்!

நவம்பர் 2-ந் தேதி கோர்ட்டுக்கு போக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் அவதூறு நடிகர்கள். அந்த லிஸ்ட்டில் நடிகர் சத்யராஜும் இருக்கிறார்.


அதே தினத்தில் இவர் புதிதாக நடிக்கவிருக்கும் படம் ஒன்றின் பிரஸ்மீட்டுக்கு கூட ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம் (பார்றா...) இப்போது எல்லாவற்றையும் கேன்சல் செய்துவிட்டு கோர்ட்டுக்கு பயணம் போக தயாராகி வருகிறார் ஜட்டி பிரா தமிழன்.



இதற்கிடையில் நமக்கு கிடைத்த இன்னொரு தகவல் ரொம்ப சுவாரஸ்யமானது. முக்குலத்தோர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவேக், எனக்கு எதிராக பத்திரிகையாளர்கள் பேசியும் எழுதியும் வருகிறார்கள். எனது பத்ம ஸ்ரீ விருதை கூட பறிக்க சூழ்ச்சி நடக்கிறது. அதனால் நமது சங்கம் எனக்கு துணையாக இருக்க வேண்டும் என்று கெஞ்சினாராம். அதே கூட்டத்தில் கலந்து கொண்ட நகைச்சுவை நடிகர் கருணாஸ், “அவர் பொது பிரச்சனைக்காக போராடி இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டால் சங்கம் துணைக்கு போகலாம். அவரோ வாய்க் கொழுப்பில் பேசி மாட்டிக் கொண்டார். அதற்கெல்லாம் நாம் துணை போக முடியாது. அவர் பேசியதற்கான பலனை அவரே அனுபவிக்கட்டும்” என்றாராம்.


இதையடுத்துதான் முக்குலத்தோர் சங்கம் விவேக்கை அநாதையாக விட்டிருக்கிறது. நடிகர் சங்கமெல்லாம் ஜுஜுபி. எனக்கு என்னுடைய ஜாதி சங்கம் ஆதரவு தரும் என்று வாய் சவடால் விட்ட விவேக் இப்போது வேறு ஒருவரை நாடியிருக்கிறார். அவர்? இவரது ஜாதியை சேர்ந்த வைரமுத்து! முன்னணி பத்திரிகைகள் சிலவற்றிற்கு நேரடியாக போன் அடித்த வைரம், “ஏதோ தெரியாம பேசிட்டாரு. எனக்காக அவரை மன்னிச்சுருங்களேன்” என்று சிபாரிசு செய்ய ஆரம்பித்திருக்கிறாராம். தனது படங்களிலும், மேடைகளிலும் இந்த வைரத்தையே அறுத்து பார்த்தவர்தான் விவேக். அது தெரியுமா இவருக்கு?

நீச்சல் காட்சியில் சேலை கட்ட முடியாது – ஹேமமாலினி

அடுத்த நமிதாவாக்கிக் காட்டுகிறேன் என இயக்குனர் ஷக்தி சிதம்பரம் சூளுரைத்திருக்கிறார். அதற்கு ஏற்ப கிளாமர் காஸ்ட்யூமா? நீச்சல் உடையா? எதற்கும் தயார் என கவர்ச்சியில் பின்னுகிறார் ஹேமமாலினி.


இந்திரவிழா படத்தின் நாயகி. தற்போது நான் அவன் இல்லை, குரு சிஷ்யன் படங்களில் நடித்து வருகிறவ‌ரிடம் ஒரு ஜாலி பேட்டி.


உங்களுடைய நிஜப் பெயரே ஹேமமாலினியா இல்லை, முன்னாள் கனவுக் கன்னி ஹேமமாலினியை மனதில் வைத்து சினிமாவுக்காக வைத்த பெயரா?


சினிமாவுக்காக இந்திரவிழா டைரக்டர் ராஜேஷ்வர் வைத்த பெயர்தான் ஹேமமாலினி. அந்த‌ப் பெயர் கொண்ட நடிகை சினிமாவில் புகழ்பெற்று இருந்ததால் அந்த‌ப் பெயரை வைப்பதாக‌க் கூறினார். எனக்கு இன்னொருத்தர் பெய‌ரில் நடிப்பது பிடிக்கவில்லை. அதனால் என்னுடைய நிஜப் பெயர் ஸ்ருதி பிரகாஷ் பெய‌ரிலேயே நடிக்க விரும்புகிறேன்.


நடிப்பதற்காக ஸ்பெஷல் பயிற்சி எடுத்திருக்கிறீர்களா?


என்னுடைய அம்மா ஒரு அத்லெடிக் பிளேயர். கராத்தே நன்றாக தெ‌ரியும். நானும் அவர்களுடன் சேர்ந்து கராத்தேயில் பிரவுன் பெல்ட் வாங்கியிருக்கேன். பரத நாட்டியம், கதக் சின்ன வயசிலிருந்தே கத்து‌க்கிட்டு வருகிறேன். நடிப்பது என்று முடிவான பிறகு ஆக்டிங் கோர்ஸில் சேர்ந்து நடிப்பு பற்றி படித்தேன்.


ஆனால், தமிழ் இன்னும் படிக்கவில்லை போலிருக்கிறதே?

நான் முதலில் நடித்தது ஒரு மராட்டிய படம். தமிழில் வாய்ப்பு கிடைத்ததும் ஒரு டீச்சரை வைத்து தமிழ் கத்து‌க்கிட்டேன். இன்னும் சில மாதங்களில் உங்களைப் போல தமிழ் பேசுவேன், பார்த்துக் கொண்டே இருங்கள்.



உங்களுக்குப் பிடித்த தமிழ் நடிகர்?


தமிழில் நான் விரும்பிப் பார்த்த படம், க‌ஜினி. அதில் சூர்யாவின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். அதேபோல் அசின்.


அவர்தான் உங்க ரோல் மாடலா?

என்னுடைய திறமையை நம்பி நடிக்க வந்திருக்கிறேன். கிடைக்கிற கேரக்டரை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே எண்ணம். ஆதனால் ரோல் மாடல் என்றும் யாரும் எனக்கு இல்லை.


உங்களுடைய சொந்த ஊர்...?

பூனா. மராட்டிய பொண்ணு நான். தமிழில் நடிப்பதால் இப்போது தமிழ்‌‌ப் பெண்.


கிளாமர் வேடங்களிலேயே நடிக்கிறீர்களே?

எனக்கு முதலில் கிடைத்தது கிளாமர் வேடம். தொடர்ந்து அந்த மாதி‌ரி கேரக்டர்களே வருகிறது. மத்தபடி, நடிப்பை வெளிப்படுத்தும் கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.


நீச்சல் உடை...?

இந்திரவிழாவில் நீச்சல் உடையில் நடித்ததி‌லிருந்து அது பற்றி கேட்கிறார்கள். நீச்சல் காட்சியில் சேலை கட்டி நடிக்க முடியாதல்லவா? கதைக்கு தேவை என்பதால் மட்டுமே அப்படி நடித்தேன்.


குரு சிஷ்யனில் நீங்கள் யாருக்கு ஜோடி, சத்யராஜுக்கா? சுந்தர் சி.க்கா?


சுந்தர் சி. ஜோடியாக நடிக்கிறேன்.


உங்களை அடுத்த நமிதாவாக்கி காட்டுகிறேன் என்று ஷக்தி சிதம்பரம் கூறியிருக்கிறாரே?


இப்போது கிளாமர் வேடங்கள்தான் எனக்கு கிடைத்திருக்கிறது. வெரைட்டியான ரோல்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. நமிதாவை எனக்குப் பிடிக்கும். அவருடன் போட்டி என்று சொல்ல முடியாது. தவிர கவர்ச்சியை நம்பி அதிக காலம் தாக்குப் பிடிக்க முடியாதே.


இப்போது எந்தெந்த படங்களில் நடிக்கிறீர்கள்?

நான் அவன் இல்லை இரண்டாம் பாகம், குரு சிஷ்யன். இன்னும் இரண்டு மூன்று படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

பொங்கலுக்கு அசல்

பொங்கலுக்கு எப்படியும் அசல் படத்தை கொண்டு வருவது என்பதில் படத்தின் இயக்குனர், ஹீரோ, தயா‌ரிப்பாளர் என அனைத்து தரப்பும் உறுதியாக இருக்கிறது.


சமீரா ரெட்டி, பாவனா என்று இரண்டு ஹீரோயின்கள், சம்பத், சுரேஷ் என இரண்டு வில்லன்கள் என டபுள் ஸ்ட்ராங்காக உருவாகி வருகிறது அசல்.



பா‌ரிஸில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சில நாட்கள் முன்புதான் தமிழகம் திரும்பியிருக்கிறார்கள். சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகள் என இன்னும் 20 சதவீத படம் பாக்கியிருக்கிறது.



இதுவரை எடுத்ததை போட்டுப் பார்த்ததில் அனைவருக்கும் திருப்தி. போஸ்ட் புரொட‌க்சன் வேலைகளையும் முடுக்கி விட்டிருக்கிறார்கள். படப்பிடிப்பை ஒரு மாதத்துக்குள் முடித்து டிசம்ப‌ரில் ஆடியோவை வெளியிட வேண்டும் என்பது திட்டம்.



இந்தப் பொங்கல் அ‌ஜித் ரசிகர்களுக்கு தல பொங்கல்.

தெலுங்கு ரீமேக்குகளில் தனுஷ்

விட்டால் ஜெயம் ரவியின் இடத்தைப் பிடிப்பார் போலும் தனுஷ். ஜெயம் ரவி கூட ரீமேக் படங்களில்தான் தொடர்ந்து நடித்து ரீமேக் ரவி என்ற பெயரைப் பெற்றுக் கொண்டார்.


இப்போது தனுஷ் அதைப் பின்தொடர்ந்திருக்கிறார். இவர் நடித்து வெற்றி பெற்ற ‘யாரடி நீ மோகினி’ படம் தெலுங்கில் ‘மாட்லக்கு அர்த்தவேர்லு’ என்ற தலைப்பில் வெளியான படமே. இதைத் தொடர்ந்து இப்போது தனுஷ் நடித்து வரும் குட்டி படமும் தெலுங்கில் வெற்றி பெற்ற ‘ஆர்யா’ படத்தின் ரீமேக்தானாம். இதில் ஸ்ரேயா இவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்போது லேட்டஸ்டாக தனுஷ் தெலுங்கில் ‘ரெடி’ என்று வெளியாகி சக்கைபோடு போட்ட படத்தை வாங்கி அதன் ரீமேக்கில் நடிக்க உள்ளாராம். இந்தப் படத்தையும் மித்ரன் ஜவஹர்தான் இயக்குகிறாராம். கதாநாயகியை வலைவீசித் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.

கண்டேன் காதலை

மோசர் பேர், ப்ளூ ஓசனுடன் இணைந்து தயா‌ரித்திருக்கும் படம், கண்டேன் காதலை. பரத், தமன்னா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர்.


ஆர்.கண்ணன் படத்தை இயக்கியிருக்கிறார். இவர் ஜெயம் கொண்டான் படத்தை இயக்கியவர். கண்டேன் காதலை இரண்டாவது படம். இந்தியில் இம்தியாஸ் அலி இயக்கிய ஜப் வி மெட் படமே கண்டேன் காதலை என்ற பெய‌ரில் தமிழில் ‌ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது.
பழனி, சேவல், ஆறுமுகம் என தொடர்ந்து ஆ‌க்சன் படங்களில் நடித்த பரத், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் காதல் படம் இது. அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். வித்யாசாகர் இசையமைத்துள்ளார். பாடல்கள் நா.முத்துக்குமார், யுகபாரதி, கார்க்கி.
இந்தப் படத்துக்காக மர வீடு ஒன்றை உருவாக்கியுள்ளனர். பாடல் காட்சியொன்றை புத்தர் கோயிலில் எடுத்துள்ளனர். இது நிஜ புத்த கோவிலல்ல. படத்துக்காக கலை இயக்குனர் உருவாக்கியது. படத்தின் பெரும் பகுதியை மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கியுள்ளனர். ‌
ரீமேக் என்றாலும், தமிழுக்கு ஏற்றபடி காட்சிகளை மாற்றியிருப்பதாக‌க் கூறுகிறார் படத்தின் இயக்குனர் ஆர்.கண்ணன். பரத் சக்தி என்ற கேரக்ட‌ரிலும், தமன்னா அஞ்சலி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். தாய்மாமனாக சந்தானம் நடித்துள்ளார். இவர்களுடன் சபான் கான், மனோபாலா, தெலுங்கு நடிகர் முன்னா ஆகியோரும் நடித்துள்ளனர்.
சந்தானத்தின் கதாபாத்திரம் இந்தியில் ஒரு காட்சியில் மட்டுமே இடம்பெறும். அதனை படம் முழுக்க வருவதுபோல் மாற்றி அமைத்திருக்கிறார்கள். வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் இந்தப் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

விக்னேஷை இயக்கும் சஞ்சய்ராம்

காலா காலமாக கஷ்டப்பட்டு நடித்துத்தான் பார்க்கிறார் நடிகர் விக்னேஷ். ஆனால் எந்தப் படமும் ஹிட் கொடுத்ததில்லை இவர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ‘குடியரசு’ படமும் இப்படித்தான் வந்த வேகத்தில் ஏப்பம் விட்டு சுருண்டு கொண்டது.


இப்போது ஒரு ஹிட் படம் கொடுத்துவிடும் நம்பிக்கையில் இருக்கிறார் இவர். காரணம் சஞ்சய்ராம். ‘வீரமும் ஈரமும்’, ‘பூவா தலையா’ என அதிரடி படங்களை இயக்கிய சஞ்சய் ராம் அதிரடிகளுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு காமெடி படம் ஒன்றை இயக்க உள்ளாராம். இந்தப் படத்தில் தான் விக்னேஷ் ஹீரோவாக நடிக்கப் போகிறார். ‘கௌரவர்கள்’ என்று படத்திற்குத் தலைப்பு வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தைப் பொறுத்தவரை காட்சிகளை யாருமே யூகிக்க முடியாத அளவுக்கு திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையை அமைத்திருக்கிறாராம் சஞ்சய்ராம்.

காரில் ஒரு காதல் கதை - பையா

வாழ்க்கையே ஒரு பயணம் தானே. பயணம் செல்லும் வாகனம், போகின்ற தூரம், எடுத்துக் கொள்கிற நேரம், உடன் பயணிக்கிற மனிதர்கள், சந்திக்கிற சம்பவங்கள் இவற்றைப் பொறுத்தே அந்தப் பயணம் சுகமாகவோ சோகமாகவோ அமையும்.


அப்படி ஒரு பயணம் தான் பையா படத்தின் கதையும். ஒரு சூழலில் கதாநாயகன் தன்னுடன் வந்த பெண்ணை கூடவே அழைத்துச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பெங்களூரில் இருந்து மும்பை வரையில் காரில் செல்லும் அவர்களின் பயணமும் அது சார்ந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளும்தான் கதை. இது ஒரு யதார்த்தமான கமர்ஷியலான சுவையான காதல் கதையாக இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குநர் லிங்குசாமி. இதற்காகவே சென்னை, பாண்டிச்சேரி, புனே, ஹைதராபாத் போன்ற இடங்களில் அலைந்து திரிந்து படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார்களாம்.

மாதவனின் புதிய படம்

எவனோ ஒருவன், யாவரும் நலம் மாதி‌ரியான வித்தியாசமான சப்ஜெக்ட்டுகளில் மட்டுமே நடிப்பது என்பதில் எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங்காக இருக்கிறார் மாதவன்.


தமிழில் அப்படியான கதைகள் அமைவது எப்போதாவதுதானே?


மாதவனுக்கு அதில் கவலையில்லை. இந்தியில் நல்ல வாய்ப்புகள் வருவதால் தமிழில் கண்டிப்பாக ஆறு மாதத்துக்கொரு படம் கொடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமில்லை. தவிர தனக்கான கதையை தானே உருவாக்க தீர்மானித்திருக்கிறார்.



அப்படி அவர் தனக்காக உருவாக்கிய படம் விரைவில் தமிழில் தொடங்கயிருக்கிறது. இதற்காக அவர் தேர்வு செய்திருக்கும் இயக்குனர் ‌ஜி.என்.ஆர்.குமரவேலன். நினைத்தாலே இனிக்கும் படத்தை இயக்கியவர்.




படத்தின் பெயர் மற்றும் தயா‌ரிப்பாளர் யார் என்பதை விரைவில் பத்தி‌ரிகையாளர்களை அழைத்து மாதவனே அறிவிக்க இருக்கிறாராம். அசத்துங்க பாஸ்.

தனுஷின் தனி வழி

ஒரே இயக்குன‌ரின் படத்தில் எந்த ஹீரோவும் தொடர்ந்து நடிப்பதில்லை. இரண்டு பட இடைவெளியாவது இருக்கும். விஜய், அ‌ஜித் மட்டுமல்ல கமல், ர‌ஜினியின் பழக்கமும் அதுதான்.


இந்த விதிமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறார் தனுஷ். செல்வராகவனின் இயக்கத்தில் அவர் நடித்து வரும் இது மாலை நேரத்து மயக்கம், செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடிக்கும் நான்காவது படம்.



வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் ஆடுகளம் அவருடனான இரண்டாவது படம். குட்டி படம் ஜவஹர் இயக்கத்தில் இரண்டாவது. இவையெல்லாம் மிகக் குறுகிய காலகட்டத்தில் எடுக்கப்படும் படங்கள் என்பதும், வெற்றிமாறனின் முதலிரண்டு படங்களிலும் தனுஷே நடித்திருக்கிறார் என்பதும் ஆச்ச‌ரியமான விஷயம்.



மித்ரன் ஜவஹ‌ரின் முதல் படம் யாரடி நீ மோகினியில் தனுஷ் ஹீரோ. இரண்டாவது படம் குட்டியிலும் அவரே ஹீரோ. அத்துடன் முடியவில்லை. ஜவஹ‌ரின் இயக்கத்தில் மேலுமொரு படத்தில் நடிக்கிறார் தனுஷ். குட்டி படப்பிடிப்பு முடியும் முன்பே அடுத்தப் படம் தீர்மானமாகிவிட்டது. பாலா‌ஜி ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயா‌ரிக்கிறது.



தெலுங்கில் வெளியான ரெடி படத்தின் ‌‌ரீமேக் இது என்கிறார்கள். என்றாலும் இந்த‌த் தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

பிரகாஷ்ரா‌ஜ் - என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்

இந்திப் படம் ஒன்றின் ‌‌ரீமேக் உ‌ரிமையை பிரகாஷ்ரா‌ஜ் வாங்கியிருப்பதாக சில வாரங்கள் முன்பு குறிப்பிட்டிருந்தோம். நானா படேகர் நடித்தப் படம் என்பதையும் அதில் தெ‌ரிவித்திருந்தோம்.


அது என்ன படம் என ஆவலுடன் காத்திருந்த வாசகர்களுக்கு...


அது, நானா படேகர் நடித்த ஆப் தக் சப்பான். இந்தப் படத்தில் நானா படேகர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்திருந்தார்.


இந்த ‌ரீமேக்கை இயக்கப் போகிறவர் எம்.எஸ்.குகன். ஒளிப்பதிவாளரான இவர் பிரகாஷ்ரா‌ஜின் டூயட் மூவிஸ் தயா‌ரித்த இனிது இனிது படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார். தனது இரண்டாவது படத்தையும் டூயட் மூவிசுக்காக இயக்கவுள்ளார். அது ஆப் தக் சப்பான் தமிழ் ‌‌ரீமேக்.


படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதும் பொறுப்பை பிரபல எழுத்தாளரும், விமர்சகருமான சி.மோகனிடம் ஒப்படைத்துள்ளனர். கவித்துவமான ஆ‌க்சன் படத்துக்கு இந்த கூட்டணி கியாரண்டி.

நடிகையிடம் பெர்பியூமை ரெக்கமென்ட் செய்யும் நடிகர்கள்

தமிழின் முன்னணி நடிகையாக இருந்து இந்தியில் பட வாய்ப்பு வேட்டைக்காக சென்றவர் நடிகை அசின். இவர், அபிஷேக் பச்சனுடன் இணைந்து இந்திப் படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.


இந்தப் படத்தில் அபிஷேக்குக்கு ஜோடியாக முதலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர் ஐஸ்வர்யாராய்தான். பின்பு ஐசுக்கு தேதிகள் இல்லாத காரணத்தால் அந்த வாய்ப்பு அசினுக்கு கிடைத்துள்ளது. இதற்கிடையில் அசினுக்கு மற்ற ஹீரோக்கள் நல்ல நல்ல பெர்ப்யூம்களை ரெக்கமன்ட் செய்கிறார்களாம். காரணம் இல்லாமல் இல்லை, அசின் மீது வியர்வை நாற்றம் அதிகமாக இருக்கிறதாம். இதைக் குறைத்தால்தானே நெருங்கி நடிகர்களால் நடிக்க முடியும்...? வேறுவழியில்லாமல் இந்தி நடிகர்கள் பெர்ப்யூம் பேரை தேடிப்பிடித்து அசினிடம் சொல்லி வருகிறார்களாம்.



பாவம்... நம்ம தமிழ் நடிகர்கள்... ரொம்பதான் சகிப்புத்தன்மை போலிருக்கு... எப்படித்தான் தாங்கிக்கிட்டாங்களோ...

விஜயலட்சுமியின் தாறுமாறான முத்தம்

சென்னை 28 படத்தில் அறிமுகம் ஆன விஜயலட்சுமி அதைத் தொடர்ந்து ‘அஞ்சாதே’ படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் ஹிட் வரிசையில் சேர்ந்துவிட இப்போது ‘அதே நேரம் அதே இடம்’ என்ற படத்தில் கிளாமர் வேடத்தில் நடித்து வருகிறாராம்.
இந்தப் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.



‘வெண்ணிலவு ஜன்னலில்...’ என்று வரும் பாடலில் விஜயலட்சுமி ஜெய்யை தாறுமாறாக முத்தமிட்டிருக்கிறாராம். இந்த காட்சிகளைப் பார்த்த சென்சார்போர்டு குழு யுஏ சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்களாம். இந்தப் படத்தை ராமகிருஷ்ணன் தமது லஷ்மி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தின் இயக்குநர் பிரபு, எஸ்.ஜெ.சூர்யாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

மயிலுக்காகக் காத்திருக்கும் ஷம்மு

நடிகை ஷம்மு ‘மாத்தியோசி’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நான்கு கதாநாயகர்கள். அவர்களுக்கு இணையாகவே தமது கேரக்டரும் பேசப்படும் என்று குறிப்பிடும் ஷம்மு இப்போது ‘மயிலு’ படத்திற்காகக் காத்திருக்கிறார்.


வித்தியாசமான கதைக் களன்களைக் கொண்ட இந்தப் படங்கள் இரண்டும் வெளிவந்துவிட்டால் தனது நடிப்பு பற்றி இன்னும் அதிகமாக ரசிகர்களும் திரையுலகமும் தெரிந்து கொள்ளும் என்கிறார். மேலும், நான் பணம் சம்பாதிப்பதற்காக சினிமாவில் நடிக்க வரலை... நல்ல படங்களில் நடிக்க வேண்டும் அதனால் திரையுலகில் நிலைத்து நிற்கவேண்டும் என்பதற்காகவே சினிமாவுக்கு வந்தேன்...’ என்றும் அழுத்திச் சொல்கிறார் ஷம்மு.



நல்ல கதை இருக்கு... பணமே வாங்காம நடிப்பீங்களா...?

லாலுடன் நடிக்க பிருத்விரா‌ஜ் மறுப்பு

மோகன்லாலுடன் நடிக்க மறுப்பு தெ‌ரிவித்திருக்கிறார் பிருத்விரா‌ஜ். அதனால் அவருக்குப் பதில் திலீப்பை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

மலையாளத்தில் முன்னணி நடிகர்கள் இணைந்து நடிப்பது சாதாரண விஷயம். மோகன்லாலின் நரசிம்மா படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருப்பார் மம்முட்டி.


இயக்குனர் ஜோஷி கிறிஸ்டியன் பிரதர்ஸ் என்ற படத்தை இயக்குகிறார். இதில் ஹீரோ மோகன்லால். அவருடன் நடிக்க பிருத்விரா‌ஜிடம் கால்ஷீட் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், மோகன்லாலுடன் நடிக்க பிருத்விரா‌ஜ் மறுத்து விட்டார். தனி ஹீரோவாக நடித்து வருவதால் மோகன்லாலுடன் இணைந்து நடிக்க அவர் விரும்பவில்லை என கூறப்படுகிறது.



தற்போது பிருத்விக்குப் பதில் திலீப்பை ஒப்பந்தம் செய்து செய்திருக்கிறார்கள். திலீப்பும் தனி ஹீரோவாக நடித்து வருகிறார். பிருத்வியைவிட இவரது படங்களுக்கே மார்க்கெட் அதிகம் என்பது குறநிப்பிடத்தக்கது.

கார்த்தி – `அய‌ன்' மேன்

கே.விஆனந்தின் அடுத்த அயன் மேன் யார் என்பதற்கு விடை கிடைத்திருக்கிறது. அவர் வேறு யாருமில்லை, சூர்யாவின் தம்பி கார்த்தி.


அயன் வெற்றிக்குப் பிறகு கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் அனைவரும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனந்தும் அவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக அயன் மாதி‌ரியே ஒரு கமர்ஷியல் கதையை எழுத்தாளர்கள் சுபாவுடன் இணைந்து உருவாக்கியிருக்கிறார். கல்பாத்தி எஸ் அகோரம் இந்தப் படத்தை தயா‌ரிக்கிறார்.



ஆனால், ஹீரோ?


சூர்யா சிங்கம், ரக்த ச‌ரி‌த்ரா, முருகதாஸின் மூன்று மொழி படம் என பிஸியாக இருக்கிறார். விக்ரம் செல்வராகவன் படம், விக்ரம் கே.குமார் இயக்கும் படம் என ஏற்கனவே கால்ஷீட்களை பி‌ரித்து தந்து விட்டார்.




இவர்களுக்காக காத்திருக்க முடியாது என்பதால் கார்த்தியை டிக் செய்திருக்கிறார் ஆனந்த். பையா படத்தை முடித்துவிட்ட கார்த்தி, சுசீந்திரனின் நான் மகான் அல்ல படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் முடிந்ததும் கே.வி.ஆனந்த் இயக்கும் படம் தொடங்குகிறது. அண்ணனைப் போல சிக்ஸ்பேக்கிற்கு தயாராகிட்டீங்களா கார்த்தி?

மணமக்களை வாழ்த்திய முதல்வர்

சின்னத்திரை ஜோடிகளான கணேஷ்- ஆர்த்தி திருமணம் குருவாயூர் கோவிலில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் நடைபெற்றது.


கணேஷ் - ஆர்த்தி ஜோடி மனாட மயிலாட நிகழ்ச்சியில் நடித்தவர்கள். இந்த நிகழ்ச்சி கலைஞர் டிவியில் ஒளிபரப்பானது. வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இயக்குநர் கே. பாலசந்தர், பி.வாசு, இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ், நடன இயக்குநர் கலா, தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சௌத்திரி, ஏ.வி.எம். சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

நிலாவும் ஜெகன்மோகினியும்

படம் நடிக்க வேண்டியது... அப்புறம் ஏதாவது ஒரு பிரச்சனையைக் கிளப்ப வேண்டியது... இந்த லிஸ்டில் லேட்டஸ்ட்டாக இடம் பிடிக்கிறார் நிலா. ‘ஜெகன்மோகினி’யில் நமீதாவுடன் இணைந்து இவர் நடித்திருக்கிறார்.


படப்பிடிப்பில் ஏகப்பட்ட காட்சிகளை இவரை வைத்து சுட்டுத்தள்ள, ஏகத்துக்கும் குஷியாக இருந்திருக்கிறார் நிலா. அப்பாடா... இப்படி ஏராளமான காட்சிகளை வைத்தால் நம்மதான் இதுல மெயின் ஹீரோயின் என்று நினைத்தவர் படத்தைப் பார்த்து ஷாக் ஆகி இருக்கிறார். பின்னே ஆகமாட்டாரா...? இவர் நடித்ததில் பெரும்பாலான காட்சிகளை வெட்டி எறிந்துவிட்டார்களாம். இது குறித்து நிலா, தனக்கு வேண்டியவர்களிடம் எல்லாம் ‘கடைசியில என்னை ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ரேஞ்சுக்கு ஆக்கிவிட்டார்களே...’ என்று வருத்தப்பட்டுச் சொல்கிறாராம்.

பிகினி டிரஸ் போட்டா படம் ஓடிருமா

கதை நல்லா இருந்தாதான் சார் படம் ஓடும்... நான் பிகினி டிரஸ் போட்டா படம் ஓடிருமா என்ன? படத்தின் வெற்றிக்கும் கிளாமருக்கும் சம்பந்தமே இல்லை...’ நல்லவேளை நம்மை அடிக்காத குறையாக சொல்கிறார் பூனம் பஜ்வா.


‘தெனாவட்டு’ மூலம் தமிழில் அறிமுகமான இந்த கிளி அந்த படத்திலும் அதற்கு அடுத்து இப்போது ‘கச்சேரி ஆரம்பம்’ படத்திலும் ஜீவாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்தப் படத்திற்கு ஜீவா உங்களை சிபாரிசு செய்தாராமே என்று சொன்னால்... அப்படில்லாம் இல்லைங்க... அவர் எனக்கு நல்ல ஃப்ரெண்ட் அவ்வளவுதான்... மத்தபடி கதாநாயகியை இயக்குநர்தானே தேர்வு செய்வார் என்று கேட்கிறார் இவர். ‘சினேகா, அசின் எல்லாம் பிகினியிலயா வந்தாங்க...’ என்றும் கேட்கிறார் பூனம் பஜ்வா. கோவா வந்தால் தான் தெரியும் சினேகா பிகினி போட்டிருக்கிறரா இல்லையா என்று...

நடிகையின் மிளகாய் குளியல்

இயக்குனர்களின் கற்பனையை கேட்டால் நமக்கே கிலி பிடிக்கிறது. சமீபத்தில் அறிமுக இயக்குனர் திரு செய்த வேலையால் நாள் முழுக்க ஷவருக்கடியில் நனைந்து கொண்டிருந்தார் நீது சந்திரா.


தீராத விளையாட்டு பிள்ளையில் விஷாலுடன் மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். அவர்களில் ஒருவர் நீது சந்திரா. கிளாமராக நடிக்க வேண்டும் என்று முதலிலேயே அக்‌ரிமெண்ட் போட்டுதான் மூவரையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.


சமீபத்தில் நீது சந்திரா நடித்த பாடல் காட்சியை எடுத்தார்கள். பாத் டப்பில் நீது நீந்துவதுபோல் காட்சி. ஏற்கனவே ரேஷனில்தான் காஸ்ட்யூம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இயக்குனர் திருவுக்கு ‘ஹாட்’ போதவில்லை. குளியல் தொட்டியில் தண்ணீருக்கு பதில் சிவப்பு மிளகாயை மிதக்கவிட்டால் என்ன என்று விப‌ரீதமாக ஒரு ஐடியா தோன்றியிருக்கிறது.


மறு நிமிடம் அதனை செயல்படுத்தியிருக்கிறார்கள். காட்சி முடிந்த பிறகு நீதுவின் உடம்பெல்லாம் எ‌ரிச்சல். ஓடிப் போய் ஷவருக்கடியில் நின்றவர்தானாம். பேக்கப் சொன்ன பிறகுதான் வெளியே வந்திருக்கிறார். திரு இயக்கும் படம் என்றால் இப்போதே தெறித்து ஓட தயாராகி வருகிறார்கள் நடிகைகள்.

ஆசின் வைக்கும் பார்ட்டி

தனது பிறந்த நாளையொட்டி பாலிவுட் பிரபலங்களுக்கு பெரிய விருந்தாக வைத்து கலக்குகிறார் ஆசின். மலையாளத்திலிருந்து கிளம்பி தெலுங்கு , தமிழ் என தேட்டையைப் போட்ட நடிகை ஆசின் இப்போது இந்தியில் குடியேறியுள்ளார்.


தனது சாமர்த்தியத்தால் முதலில் அமீர்கான், பிறகு சல்மான் கான், அடுத்து அபிஷேக் பச்சன் என விஐபி நடிகர்களோடு வெள்ளித் திரையில் விளையாடி வருகிறார்.



இன்று ஆசினுக்கு 25வது பிறந்த நாள். இதை சிறப்பாக கொண்டாடுகிறார் ஆசின். பாலிவுட்டுக்கு வந்த பின்னர் கொண்டாடும் முதல் பிறந்த நாள் என்பதால் தடபுடலாக இருக்கிறாராம் ஆசின்.



நேற்று முதலே ஆசின் தனது பிறந்தநாளை கொண்டாட ஆரம்பித்து விட்டார். இன்று பாலிவுட்டின் பிரபலங்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனராம்.



இன்று பாலிவுட் பிரபலங்களுக்கு பெரிய விருந்தாக வைக்கவுள்ளாராம்.



ஏணியாக இருந்து ஏற்றி விட்ட தமிழ்த் திரையுலகினருக்கு இந்த பார்ட்டியில் இடம் இல்லை என்று தெரிகிறது.



தற்போது அசுதோஷ் கோவரிகரின் புதிய படத்தில் அபிஷேக் பச்சனுடன் இணைந்து நடிக்கவுள்ளார் ஆசின். இப்படத்தில் முதலில் ஐஸ்வர்யா ராய்தான் அபிஷேக்கின் ஜோடியாக நடிக்கவிருந்தார். ஆனால் டேட்ஸ் இல்லாததால் ஆசின் வந்து விட்டார்.



மும்பையிலிருந்து காற்று வாக்கில் வந்த ஒரு செய்தி ... அசின் மீது வியர்வை நாற்றம் ஓவராக இருக்கிறதாம். என்ன சென்ட் போட்டாலும் வேலைக்காகவில்லையாம். வெற்றிகரமான நடிகை என்ற முத்திரை விழுந்து விட்டதால் இவரைத் தவிர்க்க முடியவில்லை. அதனால் நல்ல பெர்ப்யூம் போட்டுக் கொண்டு வந்து பெர்பார்ம் பண்ணுங்க என்று ஹீரோக்கள் ரெக்கமன்டேஷன் செய்துள்ளனராம்.

வடிவேலுக்கு உணவு ஊட்டிய ஆர்.கே

நடிகர் ஆர்.கே. ‘எல்லாம் அவன் செயல்’ படத்திலும் ‘அழகர் மலை’ படத்திலும் கதாநாயகனாக நடித்தவர். அவர் ஒரு தொழிலதிபரும் கூட. அவர் சென்னை, தி.நகரில் ஒரு ஓட்டலைத் திறந்துள்ளார்.


இந்த ஓட்டலை காமெடி நடிகர் வடிவேலு திறந்து வைத்தார். இந்த ஓட்டலின் பெயர் ‘சாப்பிடலாம் வாங்க’ என்பதாகும். இந்த உணவகம் பற்றி ஆர்.கே. ‘அருமையான, உயர்தரமான உணவு தரவேண்டும் என்பது மட்டுமே எங்கள் குறிக்கோள். புகழ்பெற்ற உணவகங்களுக்கு சவால் விடும் வகையில் எங்கள் உணவகத்தின் சுவையும், சேவையும் இருக்கும். இரண்டு வருடகால முயற்சியின் வெற்றிதான் இது. நடிப்பும் தொழிலும் எனது இரு கண்கள். அடுத்து பிரபலமான இயக்குநர் ஒருவர் இயக்கத்தில் நடிக்க உள்ளேன்...’ என்று சொன்னார். உணவகத்தில் ஆர்.கே.வும் வடிவேலும் உணவருந்தி மகிழ்ந்தனர். ஒரு கட்டத்தில் ஆர்.கே. வடிவேலுக்கு ஊட்டிவிட அந்த இடமே கலகலப்பாக இருந்தது.

இஷ்டப்பட்டு கஷ்டப்படும் ஜெய் ஆகாஷ்

ஜெய் ஆகாஷ் இயக்கி நடித்துள்ள படம் ‘காதலன் காதலி’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய பாடலாசிரியர் சினேகன், ‘ஜெய் ஆகாஷ்... இஷ்டப்பட்டு கஷ்டப்படுபவர்’ என்று பாராட்டினார்.



‘காதலன் காதலி’ படத்தின் இசையை இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் வெளியிட துணை மேயர் சத்யபாமா பெற்றுக் கொண்டார். பின்பு பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜெய் ஆகாஷ் ‘தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துவிட்டேன். முன்னணி நடிகர், இயக்குநர் ஆக வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அதற்கான முழு முயற்சியில் இப்போது இறங்கியிருக்கிறேன். எனது முழு திறமையையும் வெளிப்படுத்தி நல்ல படங்களைக் கொடுத்து விரைவில் முன்னணி நடிகனாவேன். இதற்கு இந்தப் படம் உறுதுணையாக நிற்கும்’ என்றார்.

தயா‌ரிப்பாளரை அதிர வைத்த சோனியா

செல்வாவிடமிருந்து திருமண பந்தத்தை துண்டித்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசை சோனியா அகர்வாலிடம் துளிர் விட்டிருக்கிறது.

திருமணம் ஆன பிறகு தொலைக்காட்சி தொட‌ரில் சோனியா நடித்தார் என்ற தகவலை இப்போது நினைவுப்படுத்திக் கொள்வது இந்த மேட்டருக்கு ரொம்பவும் அவசியமானது.



திருமணமான நடிகைகளை தமிழ் சினிமா தீண்டுவதில்லை என்பது சின்ன குழந்தைக்கும் தெ‌ரியும். ஆனானப்பட்ட சிம்ரனாலேயே அந்த விதியை மாற்ற முடியவில்லை.



இந்நிலையில் சோனியா அகர்வாலை ஒப்பந்தம் செய்ய போயிருக்கிறார் ஒரு விசால மனசு தயா‌ரிப்பாளர். அவரது படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட சோனியா சம்பளமாக கேட்டது... மகா ஜனங்களே அதிர்ச்சி அடையாதீர்கள், ஜஸ்ட் அறுபது லட்சங்கள்.



திருமணமாகிவிட்டது, தொலைக்காட்சியில் நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார். ஆறு லட்சமே அதிகம் என்ற நினைப்பில் வந்தவருக்கு பே‌ரிடி.



பீக்கில் இருக்கும் நயன், த்‌ரிஷாவே அரை கோடிக்கு ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் அவுட் ஆஃப் போகஸில் இருப்பவருக்கு அறுபது லட்சமா? துண்டை உதறி தோளில் போட்டவர் அப்படியே எஸ்ஸாகியிருக்கிறார்.



ம்.. நினைப்புதான் பொழப்பை கெடுக்குது.

அஜீத்திற்கு தடையா? அதிர வைக்கும் சங்கம்!

நகுல் இடத்தை பிடிப்பார்கள் போல் தெரிகிறது அஜீத்தும், ஜெயம் ரவியும்! ஹையோடா என்று அவசரப்படாதீர்கள். இது தண்டனை சட்டம் பெப்சி விதிகளுக்கு உட்பட்டது.


கடந்த சில வாரங்களுக்கு முன் நகுல் நடிக்கும் கந்தக்கோட்டை படத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று தீர்மானித்தது பெப்சி என்று சொல்லப்படுகிற திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம். காரணம், இந்த அமைப்பின் சார்பாக நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் நகுல் கலந்து கொள்ளவில்லை என்பதுதான். இதில் எல்லா நட்சத்திரங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயமாக வலியுறுத்தப்பட்டது. இவர்கள் கலந்து கொள்ள வசதியாக வெளிநாட்டில் படப்பிடிப்பு இருந்தாலும் ரத்து செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

சென்னையில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் தயக்கம் காட்டும் நயன்தாராவே பிரச்சனைக்கு பயந்து மாநாட்டில் கலந்து கொண்டார். நிலைமை அப்படியிருக்க, அஜீத்தும், ஜெயம் ரவியும் கலந்து கொள்ளவில்லையே? அவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தால் என்ன என்று யோசித்து வருகிறார்களாம் பெப்சியில்.
இருவருமே வெளிநாட்டில் நடைபெற்ற அசல் மற்றும் தில்லாலங்கடி படப்பிடிப்பில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெப்சியா, படைப்பாளியா என்ற மோதல் வந்தபோது இக்கட்டான நேரத்தில் தொழிலாளர்கள் பக்கம் நின்றவர் அஜீத். இதன் காரணமாக அவருக்கு ஏற்பட்ட இழப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதையெல்லாம் மனதில் வைத்து இந்த முறை அவர் மீது நடவடிக்கை பாயாது என்றும் கூறப்படுகிறது.
பார்க்கலாம்...

ரஷ்யாவில் ர‌ஜினி, கமல் படங்கள்

ர‌ஜினி, கமல் படங்களை ரஷ்ய சப் டைட்டிலுடன் ரஷ்யாவில் வெளியிட‌ப் போகிறார்கள் என்று பல மாதங்கள் முன்பு சேதி சொல்லியிருந்தோம். அதற்கான வேலைகள் தற்போது ஜரூராக நடந்து வருகின்றன.


வருகிற டிசம்பர் மாதம் சென்னையில் ரஷ்ய திரைப்பட விழா நடக்கிறது. பதில் விருந்து மாதி‌ரி அடுத்த ஜனவ‌ரியில் மாஸ்கோவில் தமிழ்‌த் திரைப்பட விழாவை நடத்துகிறார்கள்.



இதில் சரஸ்வதி சபதம், வசந்த மாளிகை, புதிய பறவை, முத்து, புன்னகை மன்னன் உள்ளிட்ட திரைப்படங்களை திரையிட முடிவு செய்துள்ளதாக‌த் தெ‌ரிகிறது. இந்த‌ப் படங்கள் சம்பந்தப்பட்ட தயா‌ரிப்பாளர்களிடம் அனுமதி வாங்கும் பணி இப்போது நடந்து வருகிடிறது.



வேட்டையாடு விளையாடு படத்தை தி ஸ்மார்ட் ஹண்ட் என்ற பெய‌ரில் இந்தியில் டப் செய்து, ரஷ்ய சப் டைட்டிலுடன் திரைப்பட விழாவில் திரையிட திட்டமிட்டுள்ளனர். அப்படியே படத்தை பாலிவுட்டில் வெளியிடவும் முடிவு செய்துள்ளனர்.



சில மாதங்கள் கழித்து மாஸ்கோ சென்றால் ரஷ்யர்கள் தில்லானா தில்லானா என்று பாடிக் கொண்டிருப்பதை கேட்கலாம்.